சர்வமத சமாதான ஊர்வலமும் ஒன்று கூடலும்

 
(வி.சுகிர்தகுமார்)

 

 அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழுவின்; ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத சமாதான ஊர்வலமும் ஒன்று கூடலும் அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்றது.
அட்டாளைச்சேனை சர்வமத குழுவின்  தலைவர் .எல்.எம்.ஹாசிமின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் ஊர்வலத்திலும் ஒன்று கூடலிலும் சர்வமத தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெருந்திரளான பொதுமக்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் சாரண மாணவர்கள் பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்பாக ஆரம்பமான ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு சமாதானத்தை வலியுறுத்திய சுலோக அட்டைகளை ஏந்தி சென்றனர்.
ஊர்வலமானது அக்கரைப்பற்று மத்திய சந்தை மணிக்கூட்டுக்கோபுரத்தை அடைந்ததுடன் அங்கு சில நிமிடங்கள் ஒன்று கூடிய அனைவரும் விழிப்புணர்வு செயற்பாட்டில் இணைந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அம்பாரை பிரதான வீதியினூடாக சென்ற விழிப்புணர்வு  ஊர்வலமானது அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலை அடைந்ததுடன் அங்கு ஒன்று கூடலும் இடம்பெற்றது.
இடம்பெற்ற ஒன்று கூடலில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் சர்வமத தலைவர்கள் சமதானத்தை வலியறுத்தி உரையினை ஆற்றினர்.Advertisement