நினைவுகள்

 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை இடம்பெற்றது.


இந்த நினைவு தினம் மறைந்த தர்மலிங்கம் அவர்களின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மறைந்த தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துனைவேந்தர் சிறி சற்குணராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம்,உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்,கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Advertisement