பேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்

 


ஐ.பி.எல் 13-வது சீசனின் மூன்றாவது போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஹைதராபாத் அணி சார்பில் கேப்டன் வார்னரும், பேர்ஸ்டோவ்வும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 6 ரன்னில் ஆட்டமிழந்தநிலையில், பேர்ஸ்டோவ்வும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர்.


Advertisement