கரையோரப் பாதுகாப்பை மீறிய, அரச உத்தியோகத்தர்கள் உட்பட மூவருக்கு விளக்க மறியல்


#Reports/Irsaath.
கரையோரக் கடல் பாதுகாப்பை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரை எதிர்வரும் 23ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைபப்பற்று நீதிவான் நீதிமன்றின் கௌரவ நீதிபதி ஹம்சா இன்று கட்டளையிட்டார்.


கடல் கரையோரப் பாதுகாப்புத் தரப்பினரின் சார்பில் இந்த முறைப்பாடு அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்தது.  அக்கரைப்பற“றுப் பொலிசார் குறித்த குற்றச்சாட்டுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்களை இன்று அக்கரைப்பற்று மன்றில் ஆஜர் செய்திருந்தனர். கரையோரக் கடல் பாதுகாப்பபுச் சட்டத்தின் கீழ், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement