பாகிஸ்தான் சென்றடைகின்றது, சிம்பாவே அணி

 


ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 30-ந்தேதி ராவல் பிண்டியில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.


21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்கிறது. அதன்பின் 28 மற்றும் 29-ந்தேதிகளில் பயிற்சி மேற்கொள்கிறது.

ஒருநாள் தொடர் அக்டோபர் 30-ந்தேதி, நவம்பர் 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 தொடர் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதி நடக்கிறது
டி20 கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. தொடர் முடிந்ததும் 12-ந்தேதி ஜிம்பாப்வே புறப்படுகிறது.


Advertisement