தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது


க.கிஷாந்தன்)

 

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பகுதியில் (13.10.2020) அன்று மதியம் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

 

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கெட்டபுலா, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

 

அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுAdvertisement