பறவைகள் சரணாலயத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்


 மட்டக்களப்பு – பிள்ளையாரடி பறவைகள் சரணாலயத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.30 அளவில் சரணாலயத்தில் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பறவைகள் சரணாலயத்தின் சுமார் 4 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பறவைகள் சரணாலயத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லைAdvertisement