கையளிப்பு

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அசாதார நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக   கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட  நாவிதன்வெளி  பிரதேச செயலகம் மக்கள் சேவைக்காக சுகாதார நடைமுறைக்கமைய இயங்கி வருகின்றது.

இதற்கமைய இன்று(13)  பாண்டிருப்பு சென்றனியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் கழகத்தினால் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் கருதி உடல் வெப்பத்தை அளக்கும் கருவி தொற்று நீக்கி திரவம் மற்றும் முகக்கவசங்கள் அடங்கிய பொதி   பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனிடம் கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சென்றனியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான வீ.ஜெகதீஸன் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் மற்றும் சென்றனியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீரங்கன் எஸ்.இராஜேஸ்வரன் என்.நிதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement