கவனயீனமாக வாகனம் செலுத்தி, கார் கம்பனிக்கார்களைக் காயப்படுத்தியவர் கைதானார்

 


கொழும்பு – தாமரை தடாகத்தை அண்மித்த பகுதியிலுள்ள கார் விற்பனை காட்சியறையொன்றின் மீது சொகுசு வாகமொன்று மோதுண்ட சம்பவம் தொடர்பில் யுவதியொருவர் உள்ளிட்ட மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதிப் பத்திரமின்றி, வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுகேகொட பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாமரை தடாகத்தை அண்மித்த பகுதியிலுள்ள கார் விற்பனை காட்சியறையொன்றின் மீது, சொகுசு வாகனமொன்று நேற்று மாலை மோதுண்டிருந்தது.

இந்த விபத்தில், காட்சியறைக்கும், காட்சியறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே கறுவாந்தோட்ட பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பம்பலபிட்டி பகுதியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த வாகன விபத்தை, குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகனே நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 
 

Advertisement