மஸ்கெலியாவில், மருந்து சிகிச்சை நிலையமொன்றும், பாமசியும் மூடப்பட்டன


 (க.கிஷாந்தன்)

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருத்து சிகிச்சை நிலையமொன்றும், மருந்தகமொன்றும் (பாமசி) இன்று (05.11.2020)  மூடப்பட்டன. அத்துடன், வைத்தியர் ஒருவர் உட்பட ஊழியர்கள் சிலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள 41 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (4) உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே மஸ்கெலியா நகரில் அவர் மருந்து எடுக்க சென்ற தனியார் வைத்திய நிலையமும், மருந்துகளை வாங்க சென்ற பாமசியும் இவ்வாறு இன்று மூடப்பட்டன. வைத்தியர் ஒருவரும், பாமசியில் தொழில் புரிந்தவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதியே குறித்த நபர் சிகிச்சைக்காக மஸ்கெலியா நகருக்கு வந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினர்.