"வழக்குத் தொடர்வேன்"


 


  1. டொனால்ட் டிரம்ப் இதுவரை 21 மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார். ஃபுளோரிடா, டெக்சாஸ் ஆகியவை அதில் இடங்கும்.
  2. அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். இம்முறை ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வாக்குகளை பெற்று வருகிறது.
  3. டெலவேரில் தமது தொண்டர்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், "வாக்குப்பெட்டியில் ஒவ்வொரு வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும்வரை தேர்தல் முடியவில்லை. நாம் வெற்றி பெறும் கட்டத்தில் இருக்கிறோம். இரவு வெற்றி உரையாற்
  4. தேர்தலை அபகரிக்க ஜனநாயக கட்சி முயல்வதாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். தனது ட்விட்டரில் பக்கத்தில் அவர், வெற்றியுரையை இன்றிரவு ஆற்றப்போவதாக கூறியுள்ளார்.
  5. போர்க்கள மாகாணங்களான பென்சில்வேனியா, மிஷிகன், ஐயோவா, விஸ்கான்சின் ஆகியவற்றில் முடிவுகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது.
  6. நூற்றாண்டில் இல்லாத வகையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நள்ளிரவைக் கடந்த பிறகும் தொடர்ந்து வருகிறது.
  7. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும்.
  8. பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.
  9. கடந்த வாரம் கொரோனா வைரஸால் தினமும் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்த சூழலில் இந்த வாரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  10. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் சார்பாக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
  11. 'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் எத்தனையை ஒருவர் கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.