ஊடகவியலாளர்களுக்கு நீர்கொழும்பில் உதவி

 


கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாப்போம்'

கம்பஹா மாவட்;ட ஊடகவியலாளர்களுக்கு  நீர்கொழம்பில் உதவி 


 'கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாப்போம்' எனும் நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் கருத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு  கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை  (28-11-2020) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நீர்கொழும்பு பிரதேச உதவிச் செயலாளர், கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட கம்பஹா மாவட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.Advertisement