சம்மாந்துறையில் இயங்கும் வட்டியில்லா வங்கிச் சேவையின் 5வது கிளை திறந்து வைப்பு.

 ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமியு சி.க. கூ ( லிமிடட்) வட்டியில்லா வங்கிச் சேவை நிறுவனத்தின் 5 வது வங்கிக் கிளை நேற்று (30) திங்கள் மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அல்-ஹாஜ் ஐ.எம்.இப்றாஹீம் தலைமையில் சம்மாந்துறை ஜாரியா ஜும்மா பள்ளிவாசலில் திறந்து வைக்கப்பட்டது.

இந் திகழ்வில் நிறுவனத்தின் உப தலைவர் ஏ.எல்.ஏ.றசூல், செயலாளர் ஏ.எல்.அல் அமீன், பொருளாளர் கணக்காளர் அஸ்ஹர் ,உப செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனீபா,ஜாரியா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் றைஸ்தீன்சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமியு நிறுவனத்தின் இயக்குணர் சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement