நிர்கொழும்பு,5 வாரங்களின் பின்னர்


 


5 வாரங்களின் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர்கொழும்பு

 

கம்பஹா மாவட்டத்தில் நிர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஐந்து வாரங்களின் பின்னர் நேற்று திங்கட்கிழமை  காலை முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில்,  காலை முதல் மக்கள் தமது அன்றாட கருமங்களை ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிந்தது. நகரில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையான மக்களே அங்கு பொருட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

வீதிகளில் வாகனங்கள் ஓரளவு காணப்பட்டன. நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில்  அரச , தனியார் பஸ்கள் சேவைக்காக தயாராக இருந்த போதிலும் குறைந்த எண்ணிக்கையான பயணிகளையே அங்கு காண முடிந்தது.

வங்கிகளின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் இருப்பதையும் காண முடிந்தது. மக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணியவாறு  அங்கு வரிசையில் நின்றதையும் அவதானிக்க முடிந்தது.

நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவில் இதுவரை 252 கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இந்த தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் பேலியாகொடை மீன் விற்னைச் சந்தை கொத்தணியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்து