அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது


 


இன்று மேற்கொள்ளப்படவுள்ள அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் 100 பேருக்கும் அட்டாளைச்சேனை பிரிவில் 150 பேருக்கும் இன்று அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் முடிவுகளை உடன் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
இதேநேரம் அட்டாளைச்சேனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 6பேர் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்நிலையில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் மரக்கறி சந்தையுடன் தொடர்புபட்டவர்களும் தங்களையும் பரிசோதனை செய்தல் பொருத்தமானது எனவு சந்கேதகமுள்ளவர்களும் இப்பரிசோதனையில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.