அக்கரைப்பற்றில் பலத்த மழை

 


வி.சுகிர்தகுமார் 0777113659   அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் பலத்தமழை பெய்து வருகின்றது.
அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகின்றது.
இதனால் தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை ஏற்படும் அபாய நிலையும் உருவாகி வருகின்றது.


கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே பாதிப்புள்ளாகியிருக்கும் மக்கள் பலத்த மழையினால் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேநேரம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் கடந்த 5நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதன் தொற்றும் அதிகரித்து வருகின்றது.
இதுவரையில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 உயர்வடைந்துள்ளதுடன் அக்கரைப்பற்றில் 62 ஆகவும் அட்டாளைச்சேனை 02 ஆகவும் ஆலையடிவேம்பு 01 ஆகவும் உள்ள நிலையில் திருக்கோவில் பிரதேசத்திலும் 04 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement