விபத்து - மூவர் காயம்

 


(க.கிஷாந்தன்)

அட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் 01.01.2021 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அட்டனிலிருந்து மஸ்கெலியாவுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மஸ்கெலியாவிலிருந்து அட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸும்டிக்கோயா வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

குறித்த முச்சக்கரவண்டி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்துள்ள அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்Advertisement