கட்டுப்படுத்த கோரிக்கை

 


அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படும் காட்டு யானைகளின் தொல்லை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்கவுக்கு, ஒலுவில் அஷ்ரப் நகர் மேட்டு நில பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ரீ. அலாவுதீனால்  அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில், ஒலுவில் அஷ்ரப் நகர், சம்புநகர், ஹிறாநகர், காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் மற்றும் ஆலிம்நகர் ஆகிய பிந்தங்கிய பிரதேசங்களிளேயே யானைகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எல்லைக் கிராமங்களில் வாழும் மக்கள் பீதியின் காரணமாக மாலை நேரங்களில் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி தங்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கும் சென்று காலையில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், நோயாளர்கள் போன்றோர் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகள் கூட்டம், வீட்டுத் தோட்டங்களையும், சேனைப் பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

“எனவே, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படும் காட்டு யானைகள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு எல்லைக் கிராமங்களில் மின்சார வேலிகளை நிர்மாணித்துத் தருமாறு, அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement