சாகாமம் குளத்தின் மூலமும் சிறுபோக விவசாய நில அளவின் எண்ணிக்கை அதிகரிப்பு



 வி.சுகிர்தகுமார் 0777113659 


  அம்பாரை மாவட்டம் சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மூலமும் மற்றும் வடிச்சல் நீர் மூலமும் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய விவசாய நில அளவின் எண்ணிக்கை 1787 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற சிறுபோகச் செய்கை தொடர்பான இரண்டாவது கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பகுதியில் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய  2955 ஏக்கர்களில்  முதற்கூட்டத்தில் 1677 ஏக்கர் வயல் நிலங்களுக்கு மாத்திரம் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டது.

இதன் பின்னராக அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாகவே மேலதிகமாக 110 ஏக்கருக்கு மேலதிகமாக அனுமதியளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நடைபெற்ற சிறுபோகச் செய்கைக்கான இரண்டாவது கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர்
இக்கூட்டத்தில் தம்பிலுவில் மாகாண பிரதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் பி.விகர்ணன் மற்றும் பிரதேச நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் வி.விவேக்சந்திரன் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், விவசாய பிரதிநிதகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் பிரகாரம் பட்டிமேடு வடக்கு, பட்டிமேடு தெற்கு, பட்டிமேடு மத்தி, மொட்டையாகல், சேனைக்கண்டம், ஊரக்கை கண்டம் அனுமதியளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் போது வடிச்சல் நீரை பயன்படுத்தி மேலதிகமாக நெற்செய்கையை மேற்கொள்வதற்கான கோரிக்கையினை விவசாயிகள் முன்வைத்தனர். தற்போது சாகாமக் குளத்தில் உள்ள நீரின் அளவை வைத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.