பட்டத்து இளவரசர் வீட்டுக் காவலில்


 ஜோர்டான் அரசர் அப்துல்லா II இன் சகோதர உறவு முறை கொண்ட முன்னால் பட்டத்து இளவரசர் ஹம்ஷாவின் அரண்மனையில் அதிரடி சோதனை நடத்தப் பட்டதுடன் அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப் பட்டுள்ளார்.

இவர் மீது நாட்டின் அரசாட்சிக்கு எதிரான வகையில் நடந்து கொண்டது மற்றும் ஊழல் குற்றச் சாட்டுக்களும் சுமத்தப் பட்டுள்ளன.

இளவரசர் ஹம்சா ஹுசேனின் மூத்த உதவியாளர்கள் இருவரையும் கூட அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மன்னர் அப்துல்லா II இற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இடம்பெற்றதாகவும் புலனாய்வுத் தகவல் அடிப்படையில் இளவரசர் ஹம்சா மீது இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

1999 ஆமாண்டு காலம் சென்ற முன்னால் மன்னரின் ஆசைப்படி இளவரசர் ஹம்சாவுக்கு பட்டது இளவரசராக முடி சுமத்தப் பட்டது. ஆனால் 2004 ஆமாண்டு இந்த இளவரசர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப் பட்டது. இதன் பின் மன்னர் அப்துல்லா தன் மூத்த மகன் ஹுசேனுக்கு பட்டத்து இளவரசர் பொறுப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.