தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களின் வாக்கு விவரம்




 


தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களின் வாக்கு விவரம் மற்றும் வெற்றி - தோல்வி நிலை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.


ஸ்ரீபிரியா

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, 53,488 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலு 68,392 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடிகை ஸ்ரீபிரியா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 14,904.


சினேகன் மற்றும் மயில்சாமி

சினேகன் மற்றும் மயில்சாமி

விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், 57,412 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 74,351 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாடலாசிரியர் சினேகன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 16,939. அதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கு 1,440 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.


மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், வெறும் 428 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி 1,24,225 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.


விஜய் வசந்த்

விஜய் வசந்த்

கன்னியாகுமரி தொகுதிக்கான மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த், 1 லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். நடிகர் விஜய் வசந்த் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,76,037.