ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 171 சட்டவிரோத சிறிய மதுபான போத்தல்கள்.


 .


சுகிர்தகுமார் 0777113659
    


  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 171 சட்டவிரோத சிறிய மதுபான போத்தல்களை அக்கரைப்பற்று பொலிசார் இன்று கைப்பற்றினர்.

மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே அக்கரைப்பற்று கலாசார மண்டப வீதியில் இருந்த வீடொன்றின் மேல்தள கூரையின் கீழே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

புனித வெசாக் தினமான இன்று அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு. எம்.எஸ்.பி.விஜயதுங்கவின்  பணிப்புரையின் கீழ் கிராமத்தை கட்டியெழுப்பும் பொலிஸ் பாதுகாப்பு குழு நிலையப் பொறுப்பதிகாரி பிரிவு எஸ்.எம்.சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மதுபான போத்தல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது 70 வயதுடைய பெண்ணொருவரும் 18 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் மதுபான போத்தல்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.