பஸ்ஸில் பயணித்த, அரச பணியாளர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு


 

SM.Irsaath Reporting.

பயணக் கட்டுப்பாடுகளை மீறி, அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று நேற்றிரவு 11.00 மணியளவில், இங்கினியாகல, நாமல்ஓயாவில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டது.

 சாரதி, நடத்துனர் உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் பயணித்த பலர்  சம்மாந்துறை, கல்முனை , சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த கொழும்பில் பணிபுரியும் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்கத்தது. 


இவர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்த பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, குறித்த பஸ்  உட்பட்ட கொழும்பு சாரதியும் அட்டாளைச்சேனை நடத்துனரும், இன்றுஅம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்