கலிபோனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு 8 பேர் பலி


 


இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், இந்த தாக்குதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.


துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு


இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து ரெயில்வே பணிமனை அருகே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.