கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மாணவரொருவர் நீரில் முழ்கினார்னார்


 


நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கடலில் செவ்வாய்க்கிழமை(8) மாலை நண்பர்களுடன் நீராடச்சென்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன்  கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில்  உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும்   நேசமணி அக்ஸயன் (வயது 17) ஆவார்.

 இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து  மாலை கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மரணமான மாணவனின்  உடல் மீட்கப்பட்ட பகுதி ஆழமான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக ஆழமான பகுதி என அறிவித்தல் பலகை ஒன்றினை நிர்மாணிக்கவுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை   மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன்  கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இது தவிர தற்போது கொரோனா அனர்த்தங்களினால்   பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில்    இந்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன் இறந்த மாணவனின் தாயார் ஆசிரியர் என்பதுடன் தந்தையார் தச்சு வேலை செய்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.