முதல் டி20 போட்டி - 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா


 


இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் சரித் அசலங்கா 26 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.