"'துயர் பகிர்வோம்''
Rep/SukirthaKumar

அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்தவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பலவருடம் கிராம உத்தியோகத்தராகவும் இரு வருடம் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவருமான பவானி வரதராஜன் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார். 


தனது சேவைக்காலத்தில் மிகவும் நேர்மையுடனும் மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் தாரக மந்திரத்திற்கமைய அர்ப்பணிப்போடும் மற்றவர்கள் மனம் நோகாத வண்ணம் சேவையாற்றிய அவரது இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தனிப்பட்ட வகையில் எனது இளமைக் காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் அரச சேவையோடிணைந்த பல்வேறு உதவியினை வழங்கிய அவரது நற்குணத்தை எண்ணி பார்ப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

மேலும் அன்னாரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தற்போது அவரது பூதவுடல் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி சடங்கு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.   


"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்''