அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடல்


 


குறைந்தளவான பணியாளர்கள் பணிக்கு அழைக்கப்படுவதன் காரணமாக, நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


அனைத்து அரச ஊழியர்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்