பொத்துவில்,கலந்தர் லெப்பை என்பவரது ஜனாசா பிரேதப் பரிசோதனையின் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு


 
அக்கரைப்பற்றில்  இன்று மரணித்தவர் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய கலந்தர் லெப்பை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இவருக்கு கொரொனா  தொற்றுக்கள இல்லை என்பதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.

.இதேவேளை இன்றைய தினம். மரண விசாரனைகள், அக்கரைப்பற்று மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி கே. சமீீம் அவர்களால் நடத்தப்பட்டது.இந்த மரணம்  தொடர்பிலான பிரேதப் பரிசோதனை செவ்வாய்க் கிழமை காலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலயில்  இடம்பெற்று பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்து.