கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு


 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதற்கான ஆரம்ப அறிகுறியிது என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த வாரம் நாளாந்தம் 200 நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது கொழும்பிலும் மேல்மாகாணத்திலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறியாகயிருக்கலாம் என அவை தெரிவித்துள்ளன.
புள்ளிவிபரங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பினர் மேமாத இறுதியிலும் யூன்மாத ஆரம்பத்திலும் பிரிட்டன் வைரஸ் காரணமாக நாளாந்தம் 180 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளன.
எனினும் ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 90 ஆக குறைவடைந்தது என தெரிவித்துள்ள தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் ஆனால் மீண்டும் சடுதியாக பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.
நாட்டின் ஏனைய மருத்துவமனைகளில் இந்த நிலை காணப்படுகின்றதா என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை கொழும்பு நகரில்மாத்திரம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை இதற்கு தடுப்பூசியே காரணம் என கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.