ஐபோன் 13 மினி விவரங்கள்


 


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐபோன் மாடல்களின் வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், முந்தைய வழக்கப்படி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.  

ஐபோன் 13 மினி உள்பட புது ஐபோன் மாடல்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. தற்போதைய ரென்டர்களின் படி ஐபோன் 13 மினி தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி ஐபோன் 12 மினி போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் புதிய கனெக்டர் பின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


 ஐபோன் 12 மினி 


அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் எல்.டி.பி.ஓ. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், புதிய ஏ15 பயோனிக் சிப்செட், 2406 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், லிடார் சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.


புதிய ஐபோன் 13 மினி துவக்க விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,042 என நிர்ணயம் செய்யப்படலாம். முந்தைய ஐபோன் 12 மினி மாடலும் இதேபோன்ற விலையிலேயே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.