இந்தோனேசியாவை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 1475 பேர் பலி ஜகார்த்தா:


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா 14-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 20,709 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
 
இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்குகிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,739 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 1.08 லட்சத்தைத் தாண்டியது. 
 
கொரோனாவில் இருந்து 31.29 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், 4.48 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.