முழுமையாக வெளியேறியது அமெரிக்கா.. வான வேடிக்கைகளுடன் கொண்டாடும் தாலிபான்கள்


 


ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டிருந்த அமெரிக்க இராணுவம் முழுமையாக அங்கிருந்து வெளியேறியுள்ளன. 

கடைசி இராணுவ வீரரும் வெளியேறும் புகைப்படத்தை அமெரிக்க இராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டிருக்கிறது. 

2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்க இராணுவம் இப்போது ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காபூல் நகரில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு கடைசி விமானம், இன்று அதிகாலை கிளம்பியுள்ளது. அமெரிக்க இராணுவம் வெளியேறியதை கொண்டாடும் வகையில், தலிபான்கள் வானவேடிக்கைகளை நடத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள், இன்று காபூல் விமான நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Kayal