கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக சுந்தரம் சிறிதரன்


 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக சுந்தரம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் கல்வி வலயத்தில் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிவந்த அவர் இன்று  (09.08.2021ஆம் திகதி) .முதல் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இளவயதுக்காலத்திலேயே சித்திரம் வரைதலில் பெயர் பெற்ற அவர் சித்திரம் என்றால் சிறி எனும் பேசும் அளவிற்கு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர். இன்று வரை பல மாணவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்கியவர். உயர் கல்வியை நிறைவு செய்த அவர் பட வரை கலைஞர் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து தொழில் நுட்ப உத்தியோகத்தராக பணியாற்றினார். அதே காலப்பகுதியில் போட்டி பரீட்சை ஒன்றின் மூலம் சித்தி பெற்று 1996 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் உள்நுழைந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் பகுதி நேர விரிவுரையாளராகவும் 2008 முதல் 2010 வரை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் முழுநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றி அதன் பின்னர் திருக்கோவில் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிவந்தார்..
இதேநேரம் தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திர பாடத்திற்கான வளவாளர் களில் ஒருவராகவும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரு வளவாளராகவும் கட்டுப்பாட்டுப் பரீட்சகராகவும் மிக உயரிய முக்கிய பணிகளை ஆற்றி வரும் இவர் ஓவியம் சிற்பம் இசை நாடகம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமை கொண்டவர்.
 இவர் கட்டடத் துறை கட்டட வடிவமைப்பு திட்டமிடல் வடிவமைப்பு போன்ற துறைகளிலும் நன்கு பாண்டித்தியம் பெற்று பல்வேறு படைப்புகளை செய்திருக்கின்றார் வடக்கு கிழக்கு பகுதிகளில் சிறந்த வடிவமைப்பாளர் விருதினையும் இரண்டு தடவை வெற்றி பெற்றிருக்கின்றார் அதேபோன்று ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தியாகதீபம் மற்றும் திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆல் கலைமணி என்ற விருதும் நிந்தவூர் பிரதேச சபையினரால் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் வெற்றி பெற்றமைக்காக கலை ஜோதி என்ற விருதையும் மற்றும் மலையக கலை கலாசார கழகத்தினால் எம்ஜிஆர் ஞாபகார்த்த ரத்ன  தீபம் போன்ற விருதினையும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர் சுவதம் போன்ற விருதுகளையும் இவர்பெற்றிருக்கின்றார்.
கிழக்கின் அறிவியல் கண்காட்சி ஆசிரியர் கலாசாலையில் மாபெரும் ஓவியக் கண்காட்சி கண்டல் தாவர கண்காட்சி கைத்துளி ஓவிய கண்காட்சி வர்ண மாலிகா ஓவியக்கண்காட்சி வர்ணஜாலம் ஓவிய கண்காட்சி என பல்வேறு ஓவியக் கண்காட்சி நிகழ்வுகளை நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் நடத்தி இருக்கின்றார். தென்கிழக்கு நுண்கலை மன்றம் கலை இலக்கிய பேரவை மற்றும் உதவும் கரங்கள்  வடகிழக்கு அன்பு கரங்கள் அமைப்பு ஆலம் விழுதுகள் அமைப்பு சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் இந்து மாமன்றம் இந்து இளைஞர் மன்றம் போன்ற பல்வேறு அமைப்புகளில் சமூக சேவை அமைப்புகளில் இவர் ஈடுபட்டு வருகின்றார். அத்தோடு கொரோனா காலகட்டத்தில் மக்களது நலன்கருதி நிவாரணப்பணிகளையும் முன்னெடுத்தவர்.
இவ்வாறான சிறந்த ஆளுமை பண்புகளை கொண்ட . சிறிதரன்; ஒரு பொறுப்புமிக்க பணிக்கு மிகவும் பொருத்தமானவர். சிறந்த திறமை மிக்கவர் என்பதனால் இவரை கல்விச்சமூகம் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.