நாட்டை முழுமையாக மூடமாட்டேன் : ஜனாதிபதி கோட்டாபய கடும் அறிவிப்பு


 

நாட்டை முழுமையாக முடக்காமல் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 

அத்துடன், நாடு முடக்கப்பட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு, நாளாந்த கூலித் தொழிலாளர்கள், விவசாயிகளும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின் போதே, நாட்டை முழுமையாக மூடமாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றலை துரிதப்படுத்தவேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

- Kayal