சிரேஸ்ட சட்டத்தரணியான திருமதி கௌரி சங்கரி தவராசா இன்று காலமானார் என்பதனை www.ceylon24.com கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழரசியல் கைதிகளின் வழக்குகள் மற்றும் முக்கியமான வழக்குகள் பலவற்றிற்கு ஆஜராகி வாதிட்டு நியாயத்தை பெற்றுக்கொடுத்து நீதித்துறையில் பிரபல்யமாக திகழ்ந்த அன்னார் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதித்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்; அனைவருக்கும் நீதி கிடைக்கப் பாடுபட்டவர் திருமதி கௌரி சங்கரி தவராசா என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வழக்குகளில் சட்ட நுணுக்கங்கள் நிறைந்த ஆலோசனைகளை அளித்தவர். வழக்குகளில் ஆழமான ஆணித்தரமான சட்ட கருத்துக்களை மேற்கோள்காட்டி வாதிடும் திறமை படைத்த அவரின் மறைவு நீதித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு.
,இவரை இழந்து வாடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.தவராசாவுக்கும்
இவரது குடும்பத்தினருக்கும் சக வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#IsmailUvaizurRahman


Post a Comment
Post a Comment