ஆலையடிவேம்பில், 1020 குடும்பங்களுக்கு இதுவரையில் 2000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 எந்தவொரு மாதாந்த உதவிப் பணமும் பெறாத குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக அரசாங்கம் 2000 ஆயிரம் ரூபா பணத்தை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 1020  குடும்பங்களுக்கு இதுவரையில் அரசின் உதவிப் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்; ஆலோசனைக்கு அமைவாக கிராம மட்ட கள உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று அரசின் பயணத்தடை கால உதவித் தொகை பணத்தினை வழங்கி வருவதுடன் உத்தியோகத்தர்களி;ன் அலுவலகங்களிலும் வழங்குகின்றனர்.
 ஆலையடிவேம்பு  பிரதேசத்தில் அரசின் சுற்று நிருபத்திற்கு அமைவாக அரசிடமிருந்து எந்தவொரு மாதாந்த உதவிப் பணமும் பெற்றுக் கொள்ளாத சுமார் 2064 வறிய குடும்பங்களில் முதல் கட்டமாக 1020 குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா உதவிப் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  கிராம சேவை உத்தியோகத்தர்கள்; மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் வீடு விடாச் சென்று அரசின் பயணத்டைக் கால உதவித் தொகை பணத்தினை வழங்கி வைத்திருந்தனர்.