ஐபிஎல் 2021- பஞ்சாப் அணியை 125 ரன்களில் கட்டுப்படுத்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்சார்ஜா:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். 

அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக மார்க்ராம் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களும், ஹர்பிரீத் 18 ரன்களும் (நாட் அவுட்), கிறிஸ் கெயில் 14 ரன்களும், தீபக் ஹுடா 13 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடுகிறது.