ஆட்டநாயகன் விருது வென்ற #மக்மதுல்லா,நியூசிலாந்தை 4 ரன்னில் வீழ்த்தியது வங்காளதேசம்



 டாக்கா:


நியூசிலாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது நயீம் 39 ரன்னும், லித்தன் தாஸ் 33 ரன்னும் எடுத்தனர். கேப்டன் மக்மதுல்லா பொறுப்புடன் ஆடி 37 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

நியூசிலாந்து சார்பில் ராச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும், அஜாஸ் படேல், மெக்கன்சி, பென்னட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 ஆட்டநாஅரை சதம் அடித்த டாம் லாதம்

இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். வில் யங் 22 ரன்னில் அவுட்டானார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. டாம் லாதம் களத்தில் நின்றும் 15 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டாம் லாதம் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

இறுதியில், நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி திரில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 65 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். அவரது போராட்டம் வீணானது.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக மக்மதுல்லா தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.