போதைப்பொருட்களுடன் கடலில் சஞ்சரித்த வெளிநாட்டு மீன்பிடிப் படகு


 


தென்னிலங்கை கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கடலில் சஞ்சரித்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, இலங்கை கடற்படை புலனாய்வுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினரால், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இப்போதைப்பொருட்கள் கைது செய்துள்ளனர்.


பாரியளவிலான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் 7 பேர் கைது-Sri Lanka Navy Seized Large Haul of Heroin-7 Foreign Nationals Arrested


இலங்கையின் தென் கடலில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து பாரிய அளவான போதைப்பொருட்களுடன் பயணித்த குறித்த படகில் இருந்த ஏழு வெளிநாட்டவர்களை இதன்போது கைது செய்துள்ளதாக, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.


குறித்த மீன்பிடி படகு மற்றும் அதிலிருந்து 7 வெளிநாட்டு சந்தேகநபர்களும் தற்போது இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து குறித்த கப்பல் மற்றும் 7 வெளிநாட்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.