ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் சமுர்த்தி சௌபாக்கியா வார தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 சமுர்த்தி சௌபாக்கியா வார தேசிய வேலைத்திட்டம் சமுர்த்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதி சமுர்த்தி சௌபாக்கியா வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையின் கீழ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி வங்கியினுடாக தொழில் முயற்சி கடன் வழங்கல் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு திறப்பு விழா  லொத்தர் மூலமாக வெற்றி பெற்றவர்களுக்கான காசோலை வழங்கல் மலசல கூடங்கள் கையளிப்பு போன்ற திட்டங்கள் இடம்பெறுகின்றன.

இதன் ஒரு கட்டமாக இன்று தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு சமுர்த்தி வங்கிகளிலும் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்;கப்பட்டது.

ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கியின் முகாமையாளர்களான கே.அசோக்குமார் எஸ்.சுரேஸ்காந்த ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்ற கடன் வழங்கும் நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன்  ; கருத்திட்ட முகாமையாளர் ரி.மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.