மலேஷியா வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன


 


இலங்கை, இந்தியா, உட்பட 5 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணக்கட்டுப்பாடுகளை மலேஷியா தளர்த்தியுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளே தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, மலேஷியாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து கொண்டவர்கள், நீண்டகாலமாக தங்குவதற்கு அனுமதி பெற்றவர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மலேஷியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இவர்கள் முழுமையாக கொவிட்19 தடுப்புமருந்து செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மலேஷியாவை வந்தடைந்தவுடன், கொவிட்19 சோதனைக்கு உட்படுவதுடன், மலேஷிய சுகாதார அமைச்சின் வழிகாட்டலின்படி, குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கவும் வேண்டும் என மலேஷிய குடியரவு பணிப்பாளர் நாயகம் கைருல் டிசைமீ தாவுத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், மலேஷியாவுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு அனைத்து நாட்டவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.