நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டுக் கொலை..!


 


நியூசிலாந்தின் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைக் கொண்ட இலங்கையர் எனவும், இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜசிந்தா அடன் தெரிவித்துள்ளார். 

2011ம் ஆண்டு நியூஸிலாந்திற்கு சென்றுள்ள குறித்த நபர், 2016ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Kayal