ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுவர் கழகங்களால் மரநடுகை


 


சுகிர்தகுமார் 0777113659 


  உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுவர் கழகங்களால் மரநடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு பரவுதலை தடுக்கும் செயற்பாடுகளிலும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் சிறுவர் கழகங்களால் மரநடுகை இடம்பெற்றதுடன் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வடிகான்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டமும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களால்  இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று 7ஃ4 பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.எம்.சமந்த திசாநாயக்கவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற சிரதானப்பணிகளிலும் மரநடுகையிலும்  பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் கணக்காளர் க.பிரகஸ்பதி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இதன்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்களால் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் டெங்கு பரவும் இட ங்கள் என கருதப்படும் பற்றைகளும் குப்பைகளும் அகற்றப்பட்டன.