வி.சுகிர்தகுமார் 0777113659
இறை நம்பிக்கையும் தன்நம்பிக்கையுமே தர்ஷிகாவை சாதனையாளராக மாற்றியது என அம்பாரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற வருட ஒன்று கூடல் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சாதனை மாணவி வைத்தியர் தர்ஷிக்காவினை பாராட்டியதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவுச்சின்னத்தினையும் வழங்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் மன்ற கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் அம்பாரை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் சுகத்கமகே பொறியியலாளர் ஏ.லியனகே உள்ளிட்ட அரச அதிகாரிகள் மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விபுலானந்தா அபிவிருத்தி நிலைய பாலர் பாடசாலையில் தனது கல்வி வாழ்க்கையினை ஆரம்பித்து கல்வியில் பல சாதனை படைத்து கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்றினைச் சேர்ந்த மருத்துவர் தணிகாசலம் தர்ஷிகாவின் பாராட்டு நிகழ்விலும் ஒன்று கூடல் நிகழ்விலும் கலந்து கொண்டவர்கள் தர்ஷிகாவினை பாராட்டி பேசினர்;.
பதில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் இறை நம்பிக்கையும் தன்நம்பிக்கையும் ஒரு மனிதரை ஒழுக்கமுள்ள சாதனையாளர்களாக மாற்றும் என்றார். இதற்கு சிறந்த உதாரணமாக வைத்தியர் தர்ஷிகாவை சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
தர்ஷிகாவினை மாணவர்கள் ரோல் மொடலாக பின்பற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார். இதேநேரம் கலந்து கொண்ட அதிதிகளும் மன்றத்தினரும் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தின் உபதலைவரான தர்ஷிகாவின் தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்திற்கும் வாழ்த்தினை தெரிவித்த மன்றத்தின் தலைவர் மற்றும் பதில் அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்கள் இணைந்து தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னத்தினை வழங்கி வைத்தனர்.
இதேநேரம் நிகழ்வில் கலந்து கொண்ட பதில் அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களை விபுலானந்தா அபிவிருத்தி நிலைய இயக்குனர் சபையினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
சாதனை மாணவி தர்ஷிக்கா கௌரவித்தினை வழங்கிய அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினருக்கு நன்றி கூறியதுடன் தனது கல்வி வாழ்க்கையினை ஆரம்பித்து வைத்த பாலர் பாடசாலையின் நிருவாகம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கௌரவம் பெறுவதை தனது பாக்கியமாக கருதுவதாக கூறியதுடன் சாதனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தமது குடும்பம், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள், விடா முயற்சி என்பன தனது சாதனைக்கு வித்திட்டதனையும் நினைவுகூர்ந்தார்.

Post a Comment
Post a Comment