கிழக்கில் 04 கொவிட் விசேட பரீட்சை நிலையங்கள்.




 


இன்று(7)திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளுக்கு விசேடமாக நான்கு(04) பரீட்சை நிலையங்களை அமைத்து பரீட்சை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட பரீட்சாத்திகளுக்கு பெரிய கல்லாறு மாவட்ட வைத்தியசாலையிலும் ,கல்முனை கல்வி வலய பரீட்சாத்திகளுக்கு அட்டாளைச்சேனை அயுர்வேத வைத்திசாலையிலும், அம்பாறை மாவட்ட பரீட்சாத்திகளுக்கு அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் ,திருகோணமலை மாவட்ட பரீட்சாத்திகளுக்கு குச்சவெளியிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பரீட்சையினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் நலன் கருதி பரீட்சை ஆணையாளரின்  பணிப்புரைக்கு அமைவாக இவ்வாறு விசேட நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.