காரைதீவில் காத்திருப்பு




காரைதீவில் எரிவாயுவைப் பெற ஜனத்திரள் அலைமோதியது.
காரைதீவு  சகா)

 எரிவாயுவை பெறுவதற்காக காரைதீவில் நேற்று(1) புதன்கிழமை அதிகாலை முதல் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இருந்தார்கள்.

கடந்த சில வாரங்களாக எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.அதனால் எரிவாயு தேவையானோர் அதிகமாக இருந்தனர்.

 காரைதீவு விபுலானந்த மைதானத்தில் நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் தமது சிலிண்டர்கள் உடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
 2 மணி வரை எரிபொருள் வினியோகம் இடம்பெறவில்லை.

 இருந்தபோதிலும் மேலும் மேலும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆண்-பெண் இருபாலாரும் அங்கு கொளுத்தும் வெயிலிலும் அங்கு கூடி நின்றதை காண முடிந்தது .

காரைதீவு பிரதேசத்திற்கு பொறுப்பான எரிவாயு முகவருடன் எமது நிருபர் தொடர்பு கொண்டபோது அவரது தொலைபேசி இயங்கவில்லை.

 எரிவாயு கிடைக்குமா? கிடைக்காதா ?என்று அறியாமல் மக்கள் நெடு நேரமாக காத்துக் கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது.