உதைப்பந்தாட்ட காலணிகள், பந்துகள் வழங்கி வைக்கும் நிகழ்வு




 

அம்பாறை மாவட்ட ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதைப்பந்தாட்ட காலணிகள், பந்துகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (28) ஞாயிற்றுக்கிழமை கழக செயலாளர் எம். எம். றஸாக் தலைமையில் இடம்பெற்றது.


அம்பாறை மாவட்ட கால்பந்து விளையாட்டு துறையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டு பல்வேறு பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொடர் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார். 


மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், பிராந்திய சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.