ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், உலகையே மெய்சிலிர்க்க வைக்கும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான, பரபரப்பான இந்தப் போட்டி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்த இரண்டு அண்டிகளும் மோதுகின்ற சிறப்புமிக்க போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் இவை மோதுகின்றன. கடந்த அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவும் பாகிஸ்தானும் 1984 முதல் இதுவரை 14 முறை ஆசிய கோப்பையில் மோதியுள்ளன. அதில் இந்தியா 8 முறையும் பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1997ஆம் ஆண்டு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாவது முறையாக இரண்டு நாடுகளும் ஆசிய கோப்பையில் மோதுகின்றன.
இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுடைய கனிவான அணுகுமுறை வைரலாகி வருகிறது. முந்தைய ஆட்டத்தில் விளையாடிய ஹாஹீன் ஷா அப்ஃரிடியின் உடல்நிலை குறித்து இந்திய வீரர்கள் அக்கறை காட்டுவது குறித்த வீடியோ வைரலானது.
சிவப்புக் கோடு
டி20 உலக கோப்பை 2022 அக்டோபரில் - நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மைதானம் 'பற்றி எரிந்த' தருணங்கள்
சிவப்புக் கோடு
அதேபோன்று, விராட் கோலி, பாபர் ஆசாம் இருவரும் ஒருவரையொருவர் குறித்து நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இவர்கள் இருவருமே உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக கருதப்படுகின்றனர். சமீபகாலமாக விராட் கோலி தடுமாறிய நிலையில் அவருக்கு ஆதரவாக பாபர் ஆசாம் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோன்று, பாபர் ஆசாமும் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். இருவரும் நேர்த்தியான பேட்ஸ்மேன்கள் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கக்கூடும்.
இந்தியா, பாகிஸ்தான் அணி விவரங்கள்
இந்தியா கடந்த ஆண்டில் இருந்த முதன்மையான ஏழு பேருடனே போட்டிக்குச் செல்வது வியக்கத்தக்கது. ஆனால், இன்னமும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தையும் அச்சுறுத்தலையும் இது கொண்டுள்ளது. அவர்கள் கோலியின் அந்தஸ்தை கொண்ட ஒரு வீரரை அணியில் சேர்த்துக்கொண்டு, அவரை வெறுமனே உட்கார வைத்திருப்பது சாத்தியமில்லை. இதனால், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவரைத் தான் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவருமே விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகின்றனர். பன்ட் ஓர் ஆல் ரவுண்ட் பேட்ஸ்மேனாக முதல் ஆறு இடங்களுக்குள் இருக்கும் ஒரேயொரு இடது கை ஆட்டக்காரர். கார்த்திக் ஒரு சிறப்பான ஃபினிஷர். இந்நிலையில், இவர்களில் யாரை உட்கார வைப்பது, யாரை உள்ளே இறக்குவது என்ற கடினமான தேர்வைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும், வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை மட்டுமே வைத்துப் பார்க்கையில் இந்திய அணியின் பந்து வீச்சு வலிமையாக இருப்பதைப் போல் தெரியவில்லை. உலக்க் கோப்பைக்கான ஒரே இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் களமிறங்க வேண்டும்.
இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷாப் பன்ட்/தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்கள்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஆர்.அஷ்வின்/அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.
விராட் கோலி - பாபர் ஆசாம்
பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், ஆசிஃப் அலி, இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ்/உஸ்மான் காதர், ஷாநவாஸ் தஹானி/முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா ஆகியோர் உள்ளனர்.
ஆடுகள நிலவரம்
இந்தப் போட்டி, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றபோது, மாலை 6 மணிக்குத் தொடங்கின. துபாய் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமாக துபாய் சூழல் இருப்பதைக் குறிக்கின்றன. இதுமட்டுமின்றி, இரவு நேரத்திலும்கூட அங்கு வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ் இருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய 17 போட்டிகளில் பாகிஸ்தான் ஒரே ஒருமுறை தான் தோல்வியடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது தோல்வியடைந்தது.
விராட் கோலிக்கு இது 100வது டி20 போட்டி. இதன்மூலம் ராஸ் டெய்லருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான ஆட்டங்களிலும் 100 போட்டிகளில் ஆடிய வீரராகிறார் கோலி.
இந்தியா-பாகிஸ்தான் அரசியல் உறவும் கிரிக்கெட் போட்டிகளும்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகள், ஆசிய கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 1990ஆம் ஆண்டில், நான்காவது ஆசிய கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது. ஆனால், அந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மோசமாக இருந்தது. ஆகையால், பாகிஸ்தான் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
கிரிக்கெட்
பட மூலாதாரம்,THARAKA BASNAYAKA/NURPHOTO VIA GETTY IMAGES
1993ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆசிய கோப்பை போட்டியை நடத்த முடியாமல் போனது.
2018ஆம் ஆண்டு போட்டிகள் இந்தியாவுக்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மீண்டும் முன்னுரிமை பெற்றன. அப்போதைய பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் அதை இந்தியாவில் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். ஆனால், நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தப் போட்டிகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகளில், இலங்கையும் வங்கதேசமும் இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படுகின்றன. ஆனால், ஒரு முக்கியமான உறுப்பினராகக் கருதப்படும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு இதுபோன்ற சுதந்திரத்தை வழங்கவில்லை.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அரங்கில் பாகிஸ்தானின் பங்கு மிக முக்கியமானது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு இருந்த காலமும் கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி தாயகம் திரும்பிய காலமும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
அந்த நேரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் சார்பாக ஜக்மோகன் டால்மியா, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டோகிர் ஜியாவுக்கு ஆதரவாக இருந்தார். பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், ஆசிய அணிகளும் அவர்கள் நாடுகளில் விளையாடாது என்று நியூசிலாந்து மற்றும் பிற வெள்ளையர் நாடுகளிடம் அவர் கூறினார்.
இந்தியாவை யார் தான் பகைத்துக்கொள்ள முடியும். எனவே நியூசிலாந்து அணி ஓராண்டுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை விளையாட பாகிஸ்தானுக்கு வந்தது.


Post a Comment
Post a Comment