காரைதீவின் மூத்த ஓய்வு நிலை அதிபர் இளையதம்பி தங்கராசா மறைவு





 (வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவின் மூத்த ஓய்வு நிலை அதிபரும், பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய தர்மகத்தாவுமான  இளையதம்பி தங்கராசா நேற்ற (11) பௌர்ணமி அன்று காலமானார்.

அவருக்கு வயது 92 ஆகும்.

 3 பிள்ளைகளின் தந்தையான இ. தங்கராசா சமூக வாழ்வில் தன்னை பூரணமாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சமாதான  நீதிவான் .

 காரைதீவிலுள்ள பல பொது அமைப்புகளிலும் தலைமை தாங்கி  வழிகாட்டல்களை செய்து வந்த ஒரு தலைவராவார்.

 அவர்  ,முன்னாள் காரைதீவு கிராம சபை அக்கிராசனரும்,  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினராகவும், வளர்ந்தோர் கல்வி அதிகாரியாகவும் இருந்து காரைதீவுக்கு பல சேவைகளை ஆற்றிய மறைந்த இ.வினாயகமூர்த்தி அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அன்னாரின் தகனக்கிரியை, நாளை மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணி அளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

அன்னாரின் மறைவு தொடர்பில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வெளியிடப்பட்ட அனுதாபக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....


சொர்க்கம் ஒன்று இருந்தால் உங்களுடைய ஆத்மா அந்த இடத்திற்கு செல்லும். சமயத்துக்காகவும் சமூகத்துக்காகவும் அர்ப்பணிப்போடு எங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த மண்ணின் எதிர்காலத்திற்காகவும் சிந்தனையை விதைத்து சென்றீர்கள் உங்களுடைய இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் உலகநியதிப்படி பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும் என்ற ஆத்ம திருப்தியோடு பாலையடி பிள்ளையார் ஆசியோடு 
இந்த பௌர்ணமி நாளிலே உங்களது பயணம் முடிந்திருக்கின்றது .

 அதுவே உங்கள் நற்செயல்களையும் நற்பண்புகளையும் எடுத்து காட்டுகிறது. பாலையடி பிள்ளையார் கோயில் தலைவர் தங்கராசா ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.